உலகின் அனைத்து பாகங்களையும் தாக்கும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணை!

Wednesday, November 22nd, 2017

சீனா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து உலகின் எந்த மூலையையும் தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

Dongfeng-41 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது, எதிரிகளின் பாதுகாப்பு அரண்களையும் துளைத்துக் கொண்டு செல்லும் திறனுடையது.

இந்த ஏவுகணை குறித்து சீனாவின் ஆயுதக் கட்டுப்பாட்டு மற்றும் ஆயுதப் பரவல் சங்கத்தின் மூத்த ஆலோசகர் Xu Guangyu கூறுகையில் Dongfeng-41 ஏவுகணையில் மூன்று நிலைகளில் திட எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

இது குறைந்தபட்சமாக 12,000 கிலோமீட்டர் வரை சென்று, இலக்கினை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.மேலும், உலகத்தின் எந்த இடத்திற்கும் சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, 10 அணு ஆயுதங்களை சுமந்து சென்று தனித்தனியாக குறித்து வைத்து இலக்குகளை தாக்கும் சக்தி வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் முதல் பாதியில் இந்த ஏவுகணை சோதணைக்கு உட்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: