உயர் சக்தி ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி – வட கொரியா!
Tuesday, September 20th, 2016
வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், வடகொரியா மற்றொரு அணுகுண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாக தென்கொரியாவின் பாதுகாப்புதுறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் வட கொரியா உயர் சக்தி கொண்ட ராக்கெட் என்ஜினை தரையில் இருந்து சோதனை நடத்தி வெற்றி கண்டுள்ளதாக அந்த நாட்டு அரசின் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
தலைவர் கிம் ஜோங் யுன் அதிகாரிகள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்த் சோதனை செயற்கை கோள் ஏவு தளத்தில் நடைபெற்றது. என ஊடக செய்தியில் தெரிவிக்கபட்டு உள்ளது.
வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டதன் 10 வது ஆண்டு நிறைவு விழா அக்டோபர் மாதம் கொண்டாட பட உள்ளது. இதற்காக புதிய செயற்கை கோள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
|
|
|


