அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு சீனா நுழைய தடை!

Tuesday, July 14th, 2020

பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு சில தடையுத்தரவுகளை அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவின் உத்தரவின் படி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவல் பிரவுன்பேக், நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ஸ்மித், செனட்டர் மார்கோ ரூபியோ மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோருக்கு நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், ‘அமெரிக்காவின் செயற்பாடுகள் இரு நாட்டு உறவை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. சீன இறையாண்மையை மீறி உள்நாட்டு விவகாரங்களில் யார் தலையிட்டாலும் அதனை ஏற்க முடியாது. சீன உள்விவகாரங்கள் குறித்தும், சீனாவுக்கு எதிராகவும் பேசிய நால்வருக்கு சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது’ என கூறினார்.

அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு இவ்வாறு சீனா தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: