உண்மையை ஒப்புக்கொண்டு சரணடையுங்கள்: – பிலிப்பையின்ஸ் ஜனாதிபதி!

நாட்டின் மேயர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள் உள்பட அதிகாரிகளுக்கு சட்ட விரோத போதைப் பொருட்களின் வர்த்தகத்தில் தொடர்பு இருப்பதாக பிலிப்பையின்ஸ் ஜனாதிபதி டொட்ரிகோ டுடெர்டோ வெளிப்படையாகக் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்ட அவருடைய தொலைக்காட்சி உரையில் சந்தேக நபர்கள் அவர்களாகவே குற்றத்தை ஒப்பு கொண்டு சரணடைய வேண்டும் என அவர் ஆணையிட்டுள்ளார்.
நாட்டின் போதை மருந்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறி ஜூன் மாதத்தில் ஜனாதிபதி டுடெர்டோ பதவியேற்றார். அதனை எதிர்ப்போர் அனைவரையும் கொன்று விடுவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
சமீபத்திய மாதங்களில் போதைப் பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கால்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
Related posts:
எகிப்துஎயார் விமானத்தை விண்கல் சிதறல் தாக்கியது?
இத்தாலியில் காட்டுத்தீ!
பாக். பிரதமர் அதிரடி - அதிர்ச்சியில் உயரதிகாரிகள் !
|
|