உணவுக்கு கையேந்தும் நிலை: கொரோனாவால் தத்தளிக்கும் இத்தாலி மக்கள்!
Monday, March 30th, 2020
இத்தாலியில் வயதான தாயாரும் மகனும் உணவுக்கு வழியில்லை என அதிகாரிகளை உதவ வேண்டும் என கெஞ்சிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இத்தாலி மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பொதுமக்களிடையே பணப்புழக்கம் கடுமையாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் இத்தாலியின் அபுலியா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.
தங்கள் குடும்பத்திற்கு இருக்கும் ஒரே நிதி ஆதாரம், தமது வயதான தாயாருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் எனவும்,
தற்போது அடுத்த வேளை உணவுக்கே கை ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வங்கியில் இருந்து தங்கள் பணத்தை எடுக்க உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும் பணபலம் படைத்த இத்தாலியிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளமையானது வறிய நாடுகள் பலவற்றில் எத்தகைய தாக்கத்தை உண்டுபண்ணவுள்ளது என பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


