உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் – அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை நிராகரித்தார் புடின்!.

உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் எனும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை Vladimir Putin நிராகரித்துள்ளார்.
அத்துடன், நேட்டோ இராணுவ கூட்டணிக்கு எதிராக போரிடுவதில் ஆர்வமில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
1962 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கியூபா ஏவுகணை நெருக்கடியைத் தொடர்ந்து உக்ரைனில் நடந்த மாறானது மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போரை தூண்டுமென அமெரிக்க ஜனாதிபதி Joe Biden முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மிக மோசமான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதன்படி, உக்ரைனின் மிகப்பெரிய தொலைபேசி இயக்குனர்கள் பாரியளவில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் காரணமாக பயனாளர்களுக்கு கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் 30 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளது. மூன்று வெவ்வேறு திசைகளில் இருந்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|