உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்!

உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றின் மீது ரஷ்யா ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அவரது துருக்கியப் பிரதிநிதியான ரெசெப் தையிப் எர்டோகனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதல் இன்று காலை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதலை நடத்துவதற்கு உக்ரேன் இராணுவ வீரர்கள் தயாராகி வருவதாக உக்ரேன் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடகொரியாவின் நீர் மூழ்கி கப்பல் திடீர் மாயம்?
டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு!
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம் !
|
|