உகண்டாவில் பரவும் உயிர்கொல்லி நோய்!

கொங்கோவைத் தாக்கியதைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டிருப்பது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமானோர் இபோலா தாக்கத்திற்குள்ளானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இபோலா தாக்கத்திற்குள்ளாகிய சிறுவன் உகண்டா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு - வரும் திங்கழன்று விசாரணை!
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழப்பு!
ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !
|
|