ஈரானுக்கு எதிராக மேலும் பல புதிய தடைகள் – ட்ரம்ப்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல புதிய தடைகளை விதிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்ரீவ் மினியுசின் இதனைத் தெரிவித்துள்ளார்.2015ம் ஆண்டு உலக வல்லரசுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் அணு தொடர்பான உடன்படிக்கை ஏற்படுத்தக் கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையை டொனால்ட் ட்ரம்ப் பேண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.எனினும் இந்த உடன்படிக்கையை டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.இந்த நிலையில் ஈரானின் தனி நபர்கள் மற்றும் வணிகங்களை இலக்கு வைத்து புதிய பொருளாதார தடைகளை ஏற்படுத்த டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பறவை காய்ச்சல் எதிரொலி: 3.92 இலட்சம் பறவை குஞ்சுகளை அழிக்கும் தென்கொரியா!
ஏனைய நாடுகளில் ஒப்பிடுகையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மிக வேகமாக இடம்பெற்றுவருகின...
இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த முயற்சி - அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்...
|
|