ஈராக்கில் தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி!

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள நகர் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் ஒன்று தவறுதலாக மக்கள் பகுதியில் நடைபெற்றதில் 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பலியாகியவர்களில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சிரியா எல்லைக்கு அருகே உள்ள அல் கயிமிலிருந்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ் குழுவின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதி ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறாக முடிந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மசூதிக்கு பதிலாக மக்கள் கூட்டம் மிகுந்த சந்தைப் பகுதி ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினரும் மற்றும் ஈராக் விமானப் படையினரும் ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களில், இந்தக் குறிப்பிட்ட தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்ற விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Related posts:
சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 33 பேர் பலி!
மோடியே எனது கணவர்: போராட்டம் நடத்தும் சாந்தி சர்மா!
ரஷ்யாவை மிரட்டும் கொரோனா இதுவரை எட்டாயிரத்தை கடந்தது உயிரிழப்பு!
|
|