இஸ்ரேல் மீது தாக்குதல் – காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Friday, November 10th, 2023
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது குறித்து சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கிடையில் கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் மோதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தாக்குதல் தொடர்பாக காஸாவின் நான்கு ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள் எனவும் இஸ்ரேலின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நான்கு ஊடகவியலாளர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆஸியில் விருந்து நிகழ்வின்போது கத்தியால் தாக்கியதில் 7 பேர் கவலைக்கிடம்!
ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி!
அணு ஆயுதங்களால் செயற்கை சுனாமி - வடகொரியாவின் பதறவைக்கும் ஆராய்ச்சி!
|
|
|


