இஸ்ரேல் சபாத் தினப் பணியில் சர்ச்சை-போக்குவரத்து முடக்கம்!
Monday, September 5th, 2016
இஸ்ரேலில் யூதர்களின் ஓய்வு நாளான சபாத் தினத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவது குறித்து ஏற்பட்ட அரசியல் மற்றும் மத சர்ச்சை காரணமாக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டதால் அங்கு போக்குவரத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு கூட்டணியில் உள்ள தீவிர மதவாத கொள்கையுடைய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையின்படி யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமையன்று ரயில் பராமரிப்பு பணியை ரத்து செய்ய ஆணையிட்டார்.சபாத் நாளன்று பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது; ஆனால் ரயில் பராமரிப்பு பணிகள் வழக்கமாக அனுமதிக்கப்படும்.
பலத்த போக்குவரத்து நெரிசலையும் இடையூறும் ஏற்படுத்திய நெடன்யாஹுவின் இந்த முடிவிற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால் இந்த நெருக்கடியை உருவாக்கியதாக அவர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அவரின் அரசியல் எதிரி இஸ்ரேல் கட்ஸின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts:
|
|
|


