இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!
Saturday, January 28th, 2023
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த தீவிரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்புகிறது ரஷ்யா!
ஒரேநாளில் 103 ஆண்கள் உள்ளிட்ட 167 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க இலங்கைக்கு பிரித்தானியா ஆதரவு!
|
|
|


