இஸ்ரேலிய எறிகணை தாக்குதல் – 2 ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் பலி!
Tuesday, April 2nd, 2024
இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் 2 ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய அரச ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில் கவலையடைவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில், இஸ்ரேல் எந்தவித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.
அதேநேரம், காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 மனிதாபிமான உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
000
Related posts:
இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!
கைது விடயம் மன்னரின் சூழ்ச்சியா? பின்னணி தகவல்கள் வெளியாகின!
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேல...
|
|
|


