இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Tuesday, August 22nd, 2023
இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 ஆம் திகதிமுதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹில்டன் ஹோட்டல் குழுமத்தின் அதி சொகுசு ஹோட்டலான ‘ஹில்டன் யால ரிசார்ட்’ திறப்பு விழாவில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வழிகாட்டலுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
இன்று இந்த நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் தபால் ஊழியர்கள்.!
நாட்டில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!
யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!
|
|
|


