இலண்டன் சென்ற விமானத்தில் கோளாறு – 209 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கியது பிரிட்டிஷ் எயார்வேஸ்!

பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து தரையறிக்கப்பட்டுள்ளது.
கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
209 பயணிகளுடன் இலண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற விமானத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விமானம் பறந்து சில மணி நேரங்களில், விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் ஏற்பட்டது. இது குறித்து பயணிகளால் விமானிக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட விமானிகள் உடனடியாக விமானம் கனடாவில் தரையிறக்கினர். இதனால், விமானத்தில் பயணித்த 209 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
அண்மைக்காலமாக போயிங் ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த நாம் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளோம் என, பிரிட்டிஸ் எயார்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|