இலங்கை கிரிக்கெட் அணியில் மறுசீரமைப்பு அவசியம் – ஜனாதிபதிக்கு அர்ஜுன கடிதம்!

இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவில் மறுசீரமைப்பு தேவை என நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
சமீபகாலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வரும் அர்ஜூன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகளால் அதிருப்தியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால மோசமான செயலையடுத்து அந்த அணி விளையாடும் போட்டிகளை காண்பதை நிறுத்திவிட்டேன். இலங்கை போட்டிக்கு பதிலாக இங்கிலாந்து – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரை விரும்பி பார்க்கின்றேன்.
இலங்கை அணி வீரர்களும், நிர்வாகிகளும் நாட்டுக்காக வெற்றியை தேடி தருவோம் என நினைப்பதை விட வருவாய், வெளிநாட்டு பயணங்கள் என அதை நினைத்து தான் அதிகம் கவலைப்படுகிறார்கள்” என கூறினார்.
அண்மையில் அர்ஜூன ரணதுங்க, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ண தொடரில் இலங்கை-இந்திய அணிகள் மோதிய இறுதிபோட்டியில், சூதாட்டம் இடம்பெற்றதாக கூறி பெரும் சர்ச்சை தோற்றுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|