இலங்கை அகதிகள் தொடர்பில் விசேட தீர்மானம்!

Saturday, February 10th, 2018

இலங்கை உட்பட பல நாடுகளின் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இந்த மாதம் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகஎதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே இந்தமாதம் 23ம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து 1250 அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்கும் திட்டம் குறித்து இதன்போது விரிவாககலந்துரையாடப்படவுள்ளதென அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தார். எனினும் இந்த உடன்படிக்கையைஅமுலாக்குவதற்கு ட்ரம்ப் இணங்கி இருந்த நிலையில் அதன்கீழ் சில அகதிகள் அமெரிக்காவிற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமுலாக்குவது குறித்தும் மானஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை இந்த திட்டத்தில்உள்வாங்குவது குறித்தும் அவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: