இலங்கைக்கு வருகை தந்த நைஜர் ஜனாதிபதி!

நைஜர் ஜனாதிபதி மொஹமட் இசோபு சுமார் இரண்டு மணி நேரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்து மீண்டும் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் நைஜர் ஜனாதிபதியும் பயணித்த வேளையில் நேற்று அதிகாலை 3.20 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதோடு அதன் பின்னர் 5.40 அளவில் குறித்த அந்த விமானம் இந்தோனேஷியாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
நைஜர் நாட்டு ஜனாதிபதியுடன் அந்நாட்டு தூதுக் குழுவினர் 7 பேரும் விமானம் ஆயத்தமாகும் தருணத்தில் கட்டுநாயக்கவிலுள்ள ஓய்வறையில் தங்கியிருந்துள்ள நிலையில் அறிவித்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அவர்கள் குறித்த விமானத்தில் இந்தோனேஷியாவுக்கு பயணத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆறுதல் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா!
அணுகுண்டை இரகசியமாக பரிசோதித்த வடகொரியா – அச்சத்தில் வல்லரசுகள்!
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கின்ற...
|
|