இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல் – கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!
Tuesday, September 19th, 2023
இந்தியாவை தளமாகக் கொண்ட மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (19.09.2023) கனேடிய உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இராஜதந்திரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உள் விவகாரங்களில் கனேடிய ராஜதந்திரியின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனடாவில் சீக்கிய காலிஸ்தானிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில், இந்திய ராஜதந்திரி ஒருவரை கனேடிய அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகுபாடுகள் வேண்டாம்: சட்டம் அனைவருக்கும் சமமானது - யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!
தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்க சுற்றறிக்கை - கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் இல்லாது அதிகபட்ச தண்டனை - பாதுகாப்பு இராஜாங்க அம...
|
|
|


