இராமேஸ்வரத்தில் இன்று அப்துல்கலாமின் சிலை திறப்பு!

Wednesday, July 27th, 2016

இராமேஸ்வரத்தில் இன்று (27) முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வெண்கலச்சிலை திறப்பு, அருங்காட்சியகம், தேசிய நினைவகம் போன்றவை அமைக்க அடிக்கல் நாட்டுதல் விழா நடைபெறுகின்றது..

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு நினைவிடத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு வைப்பதற்காக அப்துல் கலாமின் 7அடி உயர வெண்கலச்சிலை, ஐதராபாத்தில் தயார் செய்யப்பட்டு பேய்க்கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு அந்த சிலை, அங்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் நிறுவப்பட்டது.

இதன் திறப்பு விழாவும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ள கலாமின் தேசிய நினைவகம் மற்றும் அறிவுசார் மையம், மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை 9 மணிக்கு போய்க்கரும்பில் நடைபெறுகின்றது..

நினைவு நாள் நிகழ்ச்சியின்போது அப்துல் கலாம் இண்டர்நே‌ஷனல் அறக்கட்டளை சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் தெரிவித்துள்ளார். இதுதவிர அறிவுசார் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.

Related posts: