இராணுவ உலங்குவானூர்திகள் நேருக்குநேர் மோதி விபத்து – 5 பேர் பலி!
Sunday, February 4th, 2018
பிரான்ஸின் தெற்கு பகுதியில் இராணுவத்தை சேர்ந்த இரு உலங்குவானூர்திகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள செயிண்ட்- டுரோபேஸ் நகரின் வடமேற்கில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கேர்கெஸ் ஏரிக்கரை பகுதி வழியாக பறந்த இராணுவத்தை சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் உலங்குவானூர்திகளும் நொறுங்கி விழுந்துள்ளதுடன் அவற்றில் சென்ற ஐந்து பேரும் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகாப்டர்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியுள்ள பிரேதங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அருகாமையில் உள்ள பிரிக்நோலஸ் நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்ப...
ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!
ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் - அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
|
|
|


