இராணுவத் நடவடிக்கையின் மூலம் தீர்வை ஏட்ட முடியாது – சிரிய பிரச்சினை தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா!

Monday, November 13th, 2017

சிரியாவின் பிரச்சினைகளுக்கு இராணுவத் நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வை ஏட்ட முடியாது என அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு சிரியாவின் அல்பு கமால் பிரதேசம் பாரிய தாக்குதலின் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.வியட்நாமில் இடம்பெற்று வரும் ஆசிய பசுபிக் உச்சி மாநாட்டின் போது கலந்து கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.

இதன்போது சிரிய தொடர்பான பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தனர்.இந்தநிலையிலேயே இரு நாடுகளும் இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டிருந்தனசிரிய எல்லைப் பிராந்தியமான அல்பு கமால் பிராந்தியம் பலம் வாய்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்வதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது

Related posts: