இராணுவத்துடன் வடகொரியா தலைவர் திடீர் ஆலோசனை!
Tuesday, December 24th, 2019
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இரு நாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வலுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், மூத்த இராணுவ அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். நாட்டின் இராணுவ திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ திறனின் விரைவான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய நபர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|
|


