இரண்டு தீவுகளை சவுதியிடம் ஒப்படைக்கிறது எகிப்து!

Friday, April 15th, 2016
கடந்த 60 ஆண்டுகளாக தமது கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு தீவுகளை சவுதியிடம் ஒப்படைக்கவிருப்பதாக எகிப்து அறிவித்துள்ளது.
செங்கடலில் சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான டிரான், சனாஃபிர் ஆகிய தீவுகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதற்காக, அந்தத் தீவுகளின் கட்டுப்பாட்டை எகிப்து 1950 ஆம் ஆண்டு கேட்டுப்பெற்றது.
எனினும், 1967 ஆம் ஆண்டு மேற்காசியப் போரில் அந்தத் தீவுகளை இஸ்ரேலிடம் எகிப்து இழந்தது.
1979 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்கீழ் அந்தத் தீவுகளை எகிப்திடம் இஸ்ரேல் திரும்ப ஒப்படைத்தது.
அதனையடுத்து அந்தத் தீவுகளை எகிப்து தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் எகிப்திற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே இது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.
இந்தச் சூழலில் இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய அந்தத் தீவுகளை மீண்டும் சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக எகிப்து அறிவித்தது.
இதற்கு எகிப்திய மக்களிடையே பலத்த எதிர்ப்பு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

Related posts: