இரண்டு உலங்குவானூர்திகள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி!
Tuesday, January 3rd, 2023
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், நேற்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்!
இந்திய சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் !
ரஷ்யாவிற்கு மறைமுகமாக கிடைக்கும் ஆயுத உதவி - சீனாவின் செயலால் பதறும் அமெரிக்கா!
|
|
|


