இரண்டு ஆண்டுகளின் பின்னர் விடுதலையான யுக்ரைனின் ராணுவ விமானி!

Thursday, May 26th, 2016
யுக்ரைனின் ராணுவ  உலங்குவானூர்தி விமானி, நாடியா செவ்ச்சென்கொ இரண்டு ஆண்டுகள் ரஷிய சிறையில் கழித்த பிறகு நாடு திரும்பியுள்ளார்.

அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவுடன் நிருபர்களை சந்தித்த அவர், தனது சகோதரிக்கும், உக்கரைன் மக்களுக்கும், உலகமுழுவதும் அவருக்காக போராடியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அப்போது அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ ரஷியா மற்றும் பிரிந்து சென்ற கிழக்கு பிராந்தியங்களில் உள்ள யுக்ரெய்ன் மக்களை மீண்டும் நாடு திரும்ப செய்வதாகவும், கிழக்கு பிராந்தியம் மற்றும் கிரிமியாவை திரும்ப பெறவும் சபதம் மேற்கொண்டார்.

இந்த விமானி, பீரங்கி தாக்குதல்களை தொடுத்ததில் கொல்லப்பட்ட இரண்டு ரஷிய தொலைக்காட்சி நிருபர்களின் மனைவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, செவ்சென்கொவை மன்னித்து விட்டதாக ரஷிய அதிபர் விலாடிமிர் புட்டின் ரஷிய தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts: