இரண்டாவது முறையாவும் நியூசிலாந்தின் பிரமராக பதவியேற்றார் ஆர்டெர்ன்!

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் நியூஸிலாந்தின் பிரதமராக ஜசிந்த ஆர்டெர்ன் பதவியேற்றுள்ளார்.
ஜசிந்த ஆர்டெர்னும் அவரது புதிய அமைச்சர்கள் குழுவும் வெலிங்டன் அரச மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஆங்கிலம் மற்றும் மாவோரி மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நியூஸிலாந்து பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவையில் எட்டு பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
கடந்த மாதம் நியூஸிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 40 வயதான ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.
கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கான ஜசிந்த ஆர்டெர்னின் முயற்சியினை கருத்திற் கொண்டு மக்கள் அவருக்கு இந்த ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டொனால்ட் டிரம்பின் வெற்றியை புகழ்ந்த அல்-கொய்தா !
பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு!
கடந்த 174 வருடங்களில் இல்லதகளவு இவ்வாண்டு புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது - ஐக்கிய நாடுகளின் உலக...
|
|