இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் – ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை!
Friday, October 28th, 2022
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் ” மிகவும் ஆபத்தான” தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
மொஸ்கோவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை இதன்போது புடின் நியாயப்படுத்தியுள்ளார்.
உலகின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை “புரட்சிகரமானது” என்று அவர் விவரித்துள்ளார்,
“எதிர்கால உலக ஒழுங்கு நம் கண்களுக்கு முன்பாக உருவாகிறது” என்றும் ரஷ்ய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யாவை “அழிக்க” முயற்சிப்பதாகவும் இதன்போது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலகம் அணு ஆயுத அச்சுறுத்தல் செய்வதாகவும் புடின் குற்றம் சாட்டினார்.
“நாங்கள் ஒரு வரலாற்று எல்லையில் இருக்கிறோம். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து வரும் மிக ஆபத்தான, கணிக்க முடியாத மற்றும் அதே நேரத்தில் முக்கியமான தசாப்தம்.”இதுவாகும்.
மேற்கு நாடுகளால் இனி பொறுப்பாக இருக்க முடியவில்லை ஆனால் அவ்வாறு செய்ய “தீவிரமாக முயற்சித்தன”. “எதிர்கால உலக ஒழுங்கு நம் கண் முன்னே உருவாகி வருகிறது” என்று கூறிய அவர், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ரஷ்யாவை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. ]
000
Related posts:
|
|
|


