இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் : லிபியாவில் 22 பேர் உயிரிழப்பு!

லிபியாவில் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன்
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்ததுடன் உயிரிழந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில், வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பொதுமக்களும், பொலிசாரும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
பதவியை ராஜினாமா செய்ய முடியாது: சசிகலா புஷ்பா!
பாகிஸ்தானில் இருந்து மோடிக்கு மிரட்டல் கடிதம் கொண்டவந்த புறா சிக்கியது!
காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி : தமிழகத்தில் சம்பவம்!
|
|