இரசாயன ஆயுதங்களை சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது – ஐ.நா!

Thursday, August 25th, 2016

இரசாயன ஆயுதங்களை அழித்துவிடுவதற்கான ஒப்பந்தத்தை மீறும் வகையில், சிரியா அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது இரண்டு முறையாவது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.

ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி சிரிய அரசாங்கத்தின் படைகள் தான் இட்லிப் மாகாணத்தில் ஏப்ரல் 2014 மற்றும் மார்ச் 2015 காலங்களில் நடந்த குளோரின் தாக்குதலுக்கு பொறுப்பு என ஐ.நா. முடிவு செய்துள்ளது. மேலும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினர் ஆகஸ்ட் 2015ல் மஸ்டர்ட் காஸ் என்று சொல்லப்படும் விஷ வாயுவை அலெப்போவின் வடக்கில் உள்ள மரியா என்ற பகுதியில் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது.

Related posts: