இரகசியங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்.!
Wednesday, October 5th, 2016
தேசபக்தியை காட்டுவதாக நினைத்து இராணுவ தகவல்களை, இராணுவம் தொடர்பான தாங்கிள் மற்றும் அதிநவீன ஆயுதங்களின் படங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் என்று இந்திய இராணுவம் குடிமக்களுக்கு எழுத்து மற்றும் ஓடியோ வடிவில் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
மேலும், இதுபோன்ற படங்களை சமூக வலைதளங்களில் பரப்பும் மக்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம், ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் நமக்கு பாதகமாக அமையக்கூடும் என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளான ஏர்மார்ஷல் ரந்தீர் சிங், பிரிகேடியர் குல்தீப்சிங் சந்த்புரி ஆகியோர் எச்சரிக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி, இராணுவவீரர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும், ஆயுதங்களை கைகளில் வைத்துக்கொண்டு, தாங்கிகள் அருகில் நின்றுகொண்டு படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts:
மக்காவில் தற்கொலைப்படை தாக்குதல்!
அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை!
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்...
|
|
|


