இயற்கை அனர்த்தம் – ஈரானில் 23 பேர் பலி!
Wednesday, March 27th, 2019
ஈரானின் தலைநகர் டெஹ்ரனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகளை இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்டவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அந்த நாட்டு ஜனாதிபதி ஹஸ்சன் ரவுஹானியின் பணிப்பில் அவர்களுக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவினால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சார விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் கொடூர தாக்குதல்:18 பேர் பலி!
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
ஜி 7 உச்சிமாநாடு ஆரம்பமானது!
|
|
|


