இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்!
Wednesday, August 14th, 2019
உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 04 மருந்துகளில் 02 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இபோலா வைரஸின் தாக்கத்தினால் சுமார் 11,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் கொங்கோ இராச்சியத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்தே இந்த மருந்தை பரிசோதித்துள்ளனர்.
சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் கொங்கோ இராச்சியத்திலேயே இபோலா வைரஸ் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடுதல் மற்றும் சுரப்பிகள் மூலமே இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2 மாதங்களில் 600 தொன் மீன் ஏற்றுமதி!
கொரோனா வைரஸின்தாக்கத்தால் இலங்கையிலும் சில பகுதிகளில் அபாயம்!
அரச அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு இரத்து !
|
|
|


