இன்றையதினம் அமெரிக்காவில் 10,000 பேரை தொற்றிக்கொண்டது கொரோனா…!

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நாளாந்த அறிக்கை விபரங்களுக்கு அமைய இன்றைய தினமே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் இதுவரை 66,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 947 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சிகா வைரஸ் ’ நினைத்ததை விட பயங்கரமானது’ – அமெரிக்கா
குஜராத் கடலில் 9 பேருடன் வந்த பாகிஸ்தான் மர்ம படகு !
கடற்படை விமானம் விபத்து : அமெரிக்கவில் 16 பேர் பலி!
|
|