இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் மடாரம் நகரின் கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சுனாமி அலை தாக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 429 ஆக அதிகரித்தது. இந்த பேரழிவில் இருந்து இந்தோனேஷிய மக்கள் மீண்டு வருவதற்குள், அனக் கிரகட்டோவா எரிமலையின் சீற்றம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால், மேலும் ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தோனேஷியாவின் மடாரம் நகரின் கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
Related posts:
பணம் இல்லாததால் மரணித்தாரா முத்துக்குமார்!
ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் - ரஷ்யா அழைப்பு!
சீனா - ரஷ்யா இடையில் முதலாவது பாலம் திறப்பு!
|
|