இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, July 7th, 2020

இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பதிவாகியுள்ளன.

இந்தோனேஷியாவில், சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டிருந்த நிலநடுக்கம் 6.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது.

அதேபோல், சிங்கப்பூரின் தென்கிழக்கில் ஆயிரத்து 102 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இது 6.1 ஆக ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன் இதன் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தியாவின் அருணாசல பிரதேசத்தில் டவாங் பகுதியை மையமாகக் கொண்டு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.33 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் இது 3.4 ஆக ரிக்டர் அளவு கோளில் பதிவாகியுள்ளது.

Related posts: