இந்தோனேஷியாவின் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த சில மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சிங்கப்பூரிலும் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை .
Related posts:
பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம்!
அரண்மனைக்கருகில் துப்பாக்கிச்சூடு: சவுதியில் பெரும் பரபரப்பு!
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்...
|
|