இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!
Thursday, November 17th, 2016
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவருக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோய் இருப்பதால், அதனை சரி செய்யும் விதமாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 64 வயதான சுஷ்மா சுவராஜுக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related posts:
நீதிமன்றம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு!
வடகொரியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்
ரஷிய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குக...
|
|
|


