இந்திய விமானங்கள் பயணிப்பதற்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வழியாக இந்திய விமானங்கள் பயணிப்பதற்காக பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்நிலையில், கர்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது.
Related posts:
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!
ஸ்பெயின் அமைச்சருக்கும் கொரோனா தொற்று!
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா - கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரம் பேருக்கு தொற்றுறுதி!
|
|