இந்திய முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்!
Thursday, August 16th, 2018
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
93 வயதுடைய வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனவும்
உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் வாஜ்பாயின் உடல்நிலையை குறித்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
பாகிஸ்தான் இராணுவத்தை வெல்லமுடியாது - ரஹீல் செரீப்!
அவுஸ்திரேலியாவில் அதிநவீன இணைய தாக்குதல்!
இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் - மோடியிடம் பைடன் உறுதி!
|
|
|


