இந்திய பொதுத் தேர்தல்: 610 கட்சிகள் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை!

இந்திய பொதுத் தேர்தலில், 610 பிராந்திய மற்றும் சிறிய கட்சிகள் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்றவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
13 கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனத்தை மாத்திரம் பெற்று நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளன.இந்தியப் பொதுத் தேர்தலில் 37 அரசியல் கட்சிகள் மக்களவைக்குத் தெரிவாகியுள்ளன.
தேர்தல் இடம்பெற்ற 542 தொகுதிகளில், 303 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சியும், 52 தொகுதிகளை காங்கிரஸும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனாவை விட நிபா அடுத்த பேராபத்தாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
தொழில் பூங்காவுக்குள் நுழைந்து சரமாரி துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி,!
இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் ஈரான் - இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலகம்...
|
|