இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் பரிசு!

Thursday, September 15th, 2022

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகளை இந்தியா பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான எதிர்வரும் 17 ஆம் திகததி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடவுள்ளார்.

மனித வளர்ச்சி மற்றும் வேட்டையாடலின் காரணமாக 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்திய சூழலியல் நிபுணரும், வனவிலங்கு நிறுவனத்தின் பிரதானியுமான யுஸ்வேந்தர் ஜாலா கூறுகையில், சிறுத்தைகள் மீண்டும் இந்திய மண்ணில் சுற்றித் திரிவதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அது நிஜமாகிவிடும் என்கிறார்.

அதன்படி. செப்டம்பர் 17ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவுள்ளன, மேலும் 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து அக்டோபர் 10ஆம் திகதி வரவுள்ளன. ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவை விடுவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

000

Related posts: