இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம்!
Wednesday, July 26th, 2023
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன.
கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.
இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.
அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


