இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு பாகிஸ்தானில் தடை!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடாத்தப்பட்டதனை தொடர்ந்து இந்தியா தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் முறுகல் நிலையினை அடுத்து இந்தியா திரைப்படங்கள் எதையும் பாகிஸ்தான் நாட்டில் ஒளிபரப்பவும் அந்நாட்டு திரையரங்கங்களுக்கு தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் இந்திய அலைவரிசையான கேபல் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஒளிபரப்பாகும் பட்சத்தில் தகுந்த தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சு சிவப்பு சமிஞ்சை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!
1000 KM நீளமான சுரங்கம் பாதை அமைக்கிறது சீனா!!
உலக சனத்தொகை இன்றுடன் 800 கோடியை தொட்டது - ஐ.நா வெளியிட்டுள்ள புதிய தகவல்!
|
|