இந்திய திரைப்படங்களை திரையிடப் போவதில்லை- பாகிஸ்தான் திரையரங்குகள்!
Saturday, October 1st, 2016
இராணுவ பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தானில் முக்கிய திரையரங்குகள் இந்தியப் படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன.
இரு நாடுகளுக்கிடையே இராணுவ பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் இராணுவத்துக்கு ஆதரவாக தாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவை கூறுகின்றன.
லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பெரு நகரங்களில் இந்தியப் படங்களுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாராகும் இந்தித் திரைப்படங்கள் பாகிஸ்தானில் பிரபலமாக உள்ளன.
நதீம் மந்திவாலா என்ற திரைப்பட வர்த்தகர், தனது வணிகம் இதனால் பாதிக்கப்படும் என்றார். இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாகிஸ்தான நடிகர்களை இந்தியப் படங்களில் பயன்படுத்தத் தடை விதித்து ஒரு நாளைக்குப் பின் இந்த நடவடிக்கை வருகிறது.

Related posts:
பல முறை பணம் எடுப்பதை தடுக்க அழியாத மை!
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரிப்பு!
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...
|
|
|


