இந்திய உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Tuesday, April 10th, 2018

பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வரைவு மேலான்மை திட்டத்தை தயாரித்து, எதிர்வரும் மே மாதம் 3-ம் திகதிக்குள் மன்றில் சமர்ப்பிக்குமாறு இந்திய உயர் நீதிமன்றம், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.இந்த மனுவை விசாரித்த இந்திய உயர் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.

இந்த உத்தரவில், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘செயல்திட்டம்’ ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்’குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் உயர் நீதிமன்றம் அளித்த கெடு முடிந்த பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

உயர் நீதிமன்றம் விதித்த காலக் அவகாசம் நிறைவடையும், இறுதி தினம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, ‘செயல் திட்டம்’ என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கோரியதுடன், 3 மாத கால அவகாசத்தையும் கோரியிருந்தது.இதனை அடுத்து, தமிழக அரசாங்கத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த மனு இந்திய உயர் நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், மத்திய அரசாங்கத்தின் விளக்கம் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தாங்கள் வழங்கிய உத்தரவு ஏன் அமுல்படுத்தப்படவில்லையென என கேள்வி எழுப்பியது.அத்துடன், மே மாதம் 3 ஆம் திகதிக்குள் காவிரி மேலான்மை மன்றம் தொடர்பான வரைவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், வரைவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் காவிரி மேலான்மை வாரியம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts: