இந்திய இராணுவம் தாக்குதல் -நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!
Thursday, September 29th, 2016
பாகிஸ்தானில் உள்ள முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை குறிவைத்து இந்தத் தாக்குதலை நேற்றிரவு மேற்கொண்டது.
இந்தத் தாக்குதலின் போது, தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்ததாக இந்தியத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அமைதியாக இருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றாலும் தாம் அவ்வாறு இருப்பதை பலவீனமாகக் கருதக்கூடாது என்றும் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
இது போருக்கான நேரம் இராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி ரஷ்ய அதிபர் உத்தரவு!
ஜப்பானில் வரலாறு காணாத புயல்!
ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!
|
|
|


