இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பட்டம்-ரெயில் மறியல் தமிழகத்தில் பாதிப்பு இல்லை!

Friday, September 2nd, 2016

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும், பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய பென்ஷன் திட் டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்தியா தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி. யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.டி.சி.டி.யூ., சேவா, டி.யூ., சி.சி, எல்.பி.எப்., யூ.டி.யூ.சி. ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும், எம்.எல்.எப்.,  விடுதலை சிறுத்தை தொழிலாளர் சங்கம், திராவிடர் தொழிலா ளர் சங்கம், உழைக்கும் மக்கள் சங்கம் ஆகிய 4 தமிழக தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

வழக்கம் போல பஸ் – ரெயில்கள் ஓடின. ஆட் டோக்கள் மற்றும் ஷேர் ஆட் டோக்களும் இயங்கின. சென்னை கோயம்பேட் டில் இருந்து வெளி மாவட் டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல ஓடியது. மாநகர பேருந்து களும் தடையின்றி இயக்கப் பட்டன.

பள்ளி குழந்தைகளை ஆட் டோவில் ஏற்றி அழைத்துச் செல்லும் டிரைவர்கள் இன்று காலையில் வழக்கம் போல தங்களது பணிகளை செய்தனர். பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடின.
அதே போல மாநகர அரசு பஸ்களும் இன்று முழு மையான அளவில் இயங் கின.

போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் மாநிலம் முழுவதும் போலீ சார் உஷார் படுத்தப்பட்டி ருந்தனர். சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையில் மன்றோ சிலை அருகில் தொ.மு.ச. நடத்திய மறியல் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.இது போல் கிண்டு ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் வேலைநிறுத்ததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.பெங்களூருவில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. பேருந்துகள் அனைத்தும் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடைகளும் பெரும்பாலும் மூடியே காணப்படுகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் வாரனாசியில்  ரோடு வேஸ் தொழிலாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒடிசாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் பல்வேறு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. இருப்பினும் சிலர் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையம் வந்திருந்தனர். இதனால் அவர்கள் அவதிக்கு ஆளாகினர்.சிலிகுரியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மேயர் அசோக் பட்டாச்சாரியா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Untitled-3 copy

Related posts: