இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – 50 ஆயிரத்தைக் கடந்தது உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் காரணமாக 950இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 84 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்து 986 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 இலட்சத்து 89 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரையில் 18 இலட்சத்து 60 ஆயிரத்து 672 பேர் மீண்டுள்ளனர். மேலும் 6 இலட்சத்து 78 ஆயிரத்து 452இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் 8 ஆயிரத்து 944 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|